இலங்கையில் தனியார் துறை ஊழியர்களுக்கும் 5ஆயிரம் கொடுப்பனவு!

0

இலங்கையில் வாழ்க்கைச் சுமையை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களே உணர்ந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் தனியார் துறை ஊழியர்களும் 5000 ரூபா கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் எதிர்வரும் 7, 10, 11ஆம் திகதிகளில் தொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தனியார் துறை, ஆடைத் துறை, பெருந்தோட்டத் துறை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கடைகள் மற்றும் அலுவலக ஊழியர் சட்டத்தின் கீழுள்ள நிறுவனங்கள் உட்பட அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிகளுடன் சுமுகமான கலந்துரையாடல் நடத்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தொழில் அமைச்சின் செயலாளர் பி.டி.யூ.எஸ்.கே. மாபா பத்திரண, தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்தின் ஏனைய அதிகாரிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here