இலங்கையில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் ஒருவரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது நேற்று உத்தரவிட்டார்.

லைட் வீதி,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கந்தளாய் பகுதியிலுள்ள திருமணமான பெண்ணொருவரை கணவன் இல்லாத சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக தெரிவித்து கணவனால் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட இளம் பெண் வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here