இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் வரை நீடிக்குமாறு கோரிக்கை!

0

இலங்கையில் தற்போது அமலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, ஒக்டோபர் வரை நீடிக்குமாறு, இலங்கை மருத்துவ அதிகாரி சங்கம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது.

தொடர்ந்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக நேர்மறையான தாக்கத்தை இலங்கை காணத் தொடங்குகிறது.

படிப்படியாக சுமைகள், ஒக்ஸிஜன் தேவை மற்றும் இறப்பு குறைந்து வருகிறது எனவும், மருத்துவ அதிகாரி சங்கம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த பலன்களையும் பெற வேண்டுமாயின், இந்த பயணக் கட்டுப்பாடுகள், ஊரடங்கு என்பன மேலும் நீடிக்கப்பட வேண்டும் என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று இலங்கை மருத்துவ அதிகாரி சங்கம் கேட்டுக்கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here