இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதால் பரிதாபமாக உயிரிழந்த நபர்!

0

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சட்டத்தை மீறிய நபரை கைது செய்து வாகனத்தில் பொலிஸ் நிலையத்திற்குள் அழைத்து செல்லும் போது குறித்த நபர் வாகனத்தில் இருந்து குதித்தமையினால் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பாணந்துறை பிரதேசத்தில் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளாகிய உயிரிழந்த நபர் 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்த உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் கடுமையாக போதைக்கு அடிமையாகியவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here