இலங்கையில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

0
FILE PHOTO: Vials labelled "COVID-19 Coronavirus Vaccine" and a syringe are seen in front of the Pfizer logo in this illustration taken February 9, 2021. REUTERS/Dado Ruvic/Illustration/File Photo

தற்பொழுது கையிருப்பில் உள்ள பூஸ்டர் மருந்து முடிவடைந்தால் அதனை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு சில காலம் செல்லும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் இதுவரையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் முடிந்தவரை விரைவாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வரையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 76 இலட்சத்து 89 ஆயிரத்து 489 ஆகும் என்றும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here