இலங்கையில் தடுப்பூசி செலுத்திய இளைஞர்கள் மயங்கி விழுந்தமையால் பரபரப்பு

0

புத்தளத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர், யுவதிகள் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.

இந்த சம்பவத்தினால் குறித்த இடத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனமடுவ, கன்னங்கர வித்தியாலத்தில் இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் சம்பவம் பதிவாகி உள்ளது.

இதன்போது சுகாதார பிரிவினர் உடனடியாக அவருக்கு சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன தெரிவித்துள்ளார்.

20 – 30 வயதிற்குட்பட்டவர்களுக்காக இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மேற்கொண்டிருந்தது.

அங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பெற்றுக் கொண்டு 20 நிமிடங்கள் தடுப்பூசி நிலையத்தில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இளைஞர் யுவதிகள் பலர் மயங்கி விழுந்துள்ளனர்.

உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள் ஒரு மணித்தியாலம் வரை அவர்களை அங்கு தங்க வைத்து சிகிச்சையளித்து அதன் பின்னர் உறவினர்களுடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here