தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கொரோனாவிற்கு பலியாகும் ஆபத்து

0

தடுப்பூசி செலுத்திக்கொள்வதும், தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதும் மக்கள் அதிகமாக காணப்படும் இடங்களை தவிர்ப்பதுமே கொரோனாவிற்கு எதிரான ஆயுதங்கள் என பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிற்கு மோசமான பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆபத்து குறைவு என்ற போதிலும் ஏனைய விடயங்கள் பலவற்றை கருத்தில்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

முதியர்வர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் கொரோனாவிற்கு பலியாகும் ஆபத்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தும்போது இதனை கருத்தில்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோய் இதயநோய் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களிற்கும் இந்த ஆபத்து அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பெறுவதற்கு தகுதியானவர்கள் அனைவரும் வழங்கப்படுகின்ற எந்த தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ள தயாராகயிருக்கவேண்டும் என தெரிவித்துள்ள நீலிகா மாலவிகே அதிகளவானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் இலங்கை வேகமாக மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here