இலங்கையில் டெல்டா தொற்றுள்ள மேலும் 14 பேர் அடையாளம்!

0

இலங்கையில் ‘டெல்டா’ வகை கொவிட் தொற்றுக்கு உள்ளான மேலும் 14 பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நான்கு மாவட்டங்களில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த மாவட்டங்களில் கொவிட் தொற்றுக்கு உள்ளான 123 பேரின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது இவர்களில் 14 பேருக்கு டெல்டா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here