இலங்கையில் டெல்டா குறைந்தாலும் காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து!

0
airborn virus floating aroud in droplets on blue sky background., 3d illustration

இலங்கையில் உச்சத்திலிருக்கும் டெல்டா தொற்றுப் பாதிப்பானது தற்போது குறைவடைந்து வரும் நிலையில் எதிர்வரும் வாரங்களில் மற்றுமொரு உருமாறிய வைரஸ் தொற்று உச்சமடைய வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவப் பேராசிரியர், சுனத் அகம்பொடி(Suneth Agampodi ) கருத்துத் தெரிவிக்கையில் ”தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் காரணமாக நாட்டில் இறப்புகள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது.

இதனால் டெல்டா வகையின் உச்சம் முடிந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர், எனினும் இலங்கை இன்னும் ஆபத்தில் இருந்து விடுபடவில்லை. பிற நாடுகளில் உள்ள கொரோனா திரிபுகள் இலங்கையையும் தாக்கும் அபாயம் காணப்படுகின்றது.

குறிப்பாக வரும் வாரங்களில் மற்றொரு உச்சம் ஏற்பட 60 சதவீதம் வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

அத்துடன், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் அசமந்த போக்குடன் செயற்படக் கூடாது. தடுப்பூசி செலுத்தியவர்களால் தடுப்பூசியைச் செலுத்தாதவர்களுக்குத் தொற்றுப் பரவும் வாய்ப்புக் காணப்படுகின்றது. எனவே மக்கள் விளிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here