இலங்கையில் டெங்கு நோய் பரவும் அபாயம்…

0

இலங்கையில் இந்த மாதத்தில் 430 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 7,317 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 1,805 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளது.

ஆண்டின் இதுவரையில் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானோர் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கொழும்பு மாவட்டத்தில் 1,159 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அச்சம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here