இலங்கையில் டிசம்பர் வரை தொடரும் சில கட்டுப்பாடுகள்!

0

இலங்கையில் மக்களின் தேவையற்ற நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக சில கட்டுப்பாடுகளை டிசம்பர் வரைநடைமுறைப்படுத்தவேண்டியுள்ளது என சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வாரஇறுதியில் மக்கள் நடமாடிய விதத்தினை பார்த்தவேளை மக்கள் இனி ஆபத்தில்லை என்ற எண்ணத்தில் செயற்படுவது புலனாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

புதுவருடகாலத்தில் இதேநிலையைமை நாங்கள் பார்த்தோம் மக்கள் ஆலயங்களிற்கும் சுற்றுலாவிற்கும் செல்ல தொடங்கினார்கள் இதன் காரணமாக கொவிட் நிலைமையை ஆபத்தானதாக மாற்றினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரசினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பொதுமக்களை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர் சில கட்டுப்பாடுகளை டிசம்பர் வரை தொடரவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிந்தித்து தான் சுற்றுலாக்களை தவிர்க்குமாறு கோரினோம். தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பேண வேண்டியது அத்தியாவசியமாகும்.

எனவே அத்தியாவசிய காரணிகளுக்காக அன்றி அநாவசிய காரணிகளுக்காக வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே டிசம்பர் மாதம் வரையிலாவது சுற்றுலா செல்லுதல் , மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களுக்குச் செல்லுதல் என்பவற்றை தவிரித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here