இலங்கையில் ஜேர்மன் பெண்களுக்கு நேர்ந்த பரிதாப நிலை!

0

தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் ஜேர்மன் பெண் ஒருவரிடம் முச்சக்கரவண்டி சாரதி தவறாக நடத்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதி எல்ல, பண்டாரவளை பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சுற்றுலா வழிகாட்டியான சந்தேகநபர், தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் ஜேர்மன் பெண்ணுடன் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று (05-01-2022) குறித்த நபரால் தான் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இதேவேளை, கொள்ளுப்பிட்டியில் உள்ள Marine Drive hotel-லில் 32 வயதான ஜேர்மன் பெண்ணை பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது காதலன் எனக் கூறிக் கொண்ட இலங்கையரால் போதைப்பொருள் கொடுத்து தவறாக நடந்துகொண்டதாக குறித்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06-02-2022) கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இலங்கையர் என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here