இலங்கையில் சொத்துக்காக மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்

0

கொரோனா தொற்றுக்குள்ளான மனைவியை கொலை செய்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் முடிப்பதற்கு தயாராகி வந்த வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த மனைவின் சொத்துக்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் இவ்வாறு வேறு திருமணத்திற்கு தயாரானதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலைச் சம்பவத்திற்காக பயன்படுத்திய தலையணை ஒன்று பாதி எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியினருக்கு 13 மற்றும் 6 வயதுடைய இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனையில் வாய் மற்றும் மூக்கு ஆகியன இறுக்கப்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மனைவியின் உயிரிழப்புக்கு பின்னர் அவரது கணவரிடம் பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்ட விரிவான விசாரணைகளின் போதே அனைத்து உண்மைகளும் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here