இலங்கையில் சுகாதார கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்த நடவடிக்கை!

0

நாட்டில் டெல்ட்டா வகை திரிபு வைரஸ் தொற்று நாட்டின் முக்கியமான இடங்களில் பலரிடம் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் தளர்த்தப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளை மீளவும் இறுக்கமாக அமுல்படுத்த அரசு ஆராய்ந்துவருகிறது.

டெல்ட்டா திரிபு வடக்கு மாகாணத்திற்கும் பரவியுள்ளதால் அதனை மேலும் பரவாமல் தடுக்கும் சுகாதார ஏற்பாடுகளை சுகாதார தரப்பு முன்னெடுத்துள்ளது.

இதன்படி இப்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை மேலும் சில வாரங்களுக்கு நீடிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here