இலங்கையில் சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரிப்பு!

0

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் திடீர் என ஒரு கிலோகிராம் சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் 160 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சீனியின் விலை இந்த வாரம் 210 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு நியாயமற்றது என்றாலும், அது குறித்து தன்னால் எதுவும் செய்ய முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அதிகபட்ச விலையில் பொருட்களை விருப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையினை அதிகரிப்பது குறித்த சட்டம் நாடாளுமன்றின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கின்றது.

இந்நிலையில் தன்னிச்சையான விலை உயர்வுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here