இலங்கையில் சிறுவர்களை அச்சுறுத்தும் ஆபத்து!

0

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படும் மிஸ்-சி நோயானது சிறுவர்களது சகல உடற் தொகுதிகளையும் பாதிக்கக் கூடிய அபாயம் மிக்கதாகும்.

8 – 16 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் இந்நோயால் பாதிக்கப்படும் வீதம் அதிகமாகவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் கிளை செயலாளர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

நாட்டில் கொவிட் தொற்று நிலைமை குறைவடைந்து வருகின்ற நிலையில் கொவிட் தொற்றுக்கு பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படும் மிஸ்-சி நோய் நிலைமை அதிகரித்து வருகிறது.

இந்த நோய் சிறுவர்களது சகல உடற் தொகுதிகளையும் பாதிக்கக் கூடிய ஒரு நோயாகவே காணப்படுகிறது.

உயர் காய்ச்சலுடன் கூடிய அதாவது உணவு கால்வாய் தொகுதியை அண்டிய குண இயல்புகள் காணப்படுகின்றன.

வாந்தி, வயிற்றோட்டம், பசியின்மை உள்ளிட்ட பல்வேறு நோய் அறிகுறிகள் தென்படும். அத்தோடு உடலில் பழுக்கள் ஏற்படல் , தசைத் தொகுதி பாதிப்புக்கள், மூட்டு வலி, தசை பிடிப்பு உள்ளிட்டவையும் காணப்படலாம். இவ்வாறான அறிகுறிகள் பிள்ளைகளுக்கு தென்பட்டால் பெற்றோர் துரிதமாக வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

காரணம் இந்நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெரும்பாலானோர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்குச் செல்கின்றனர். இதனால் மரணங்கள் ஏற்படக் கூடிய அபாயமும் உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here