கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதியான 31 சிறுவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த மாத ஆரம்பத்தில் குறித்த வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதியான 4 சிறுவர்கள் மாத்திரமே சிகிச்சை பெற்றிருந்தனர்.
எனினும் இந்த எண்ணிக்கை தற்போது 31 ஆக அதிகரித்துள்ளது.
எனவே, சிறுவர்களைப் பாடசாலைக்கு அனுப்பும் போதும் வேறு இடங்களுக்கு அனுப்பும் போதும் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு சுகாதார தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.