இலங்கையில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு!

0

ஹிங்குரக்கொட பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் அதிபரான பிக்கு ஒருவர் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, பிக்கு ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 15 வயது சிறுவன் தொடர்பில் செய்திகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது.

அதிபரான குறித்த பிக்குவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 30 திகதி ஹிங்குரக்கொட நகரில் குறித்த சிறுவனின் பெற்றோர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

அத்துடன், பிக்கு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிபரான பிக்கு, இன்று (4) தமது சட்டத்தரணிகள் இருவர் ஊடாக ஹிங்குரக்கொட நீதிவான் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து, எதிர்வரும் 18 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதன்போது, துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாகக் கூறப்படும் சிறுவனின் பெற்றோர், நீதிமன்றத்துக்கு அருகில் மௌன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here