இலங்கையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து படமெடுத்து மிரட்டிய நபர்!

0

யுவதி ஒருவரின் நிர்வாண புகைப்படத்தை இணையத்தளத்தில் பதிவிடப்போவதாக அச்சுறுத்தி கப்பம் பெற்ற இளைஞர் ஒருவர் போத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹபுகல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பேஸ்புக் ஊடாக 16 வயது யுவதி ஒருவருடன் பேசிப் பழகி, அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன், அந்த பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்.

பின்னர் குறித்த புகைப்படத்தை இணையத்தளத்தில் பதிவிட்டு விடுவதாக யுவதியை மிரட்டி பணம் வாங்கியுள்ளார்.

இளைஞரின் மிரட்டலுக்கு பயந்த பாதிக்கப்பட்ட யுவதியும், தனது தந்தையின் பணத்தை திருடி அவருக்கு கொடுத்து வந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பணத்தை காணவில்லை என மகளிடம் தந்தை கேட்ட போது , தனக்கு நடந்த எல்லாவற்றையும் தந்தையிடம் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும், அதனையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here