இலங்கையில் சிறுமிக்கு நடந்த கொடூரம்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

0

இலங்கையில் 15 வயது சிறுமி பாலியல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக பயன்படுத்துவதற்கு விளம்பரம் செய்வதற்காக இணையத்தளம் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இணையத்தளத்தின் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் 5 கோடி ரூபாய் வைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதென பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருப்பது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சந்தேக நபர்கள் 11 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த சந்தேக நபர்கள் 11 பேரிடம் இருந்த 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான வங்கி கணக்குள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

சிறுமியை பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை செய்தமை தொடர்பில் விளம்பரம் வெளியிட்ட இணைத்தளத்தின் உரிமையாளர் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த ரணசிங்க ஆராச்சிகே துமிந்த சம்பத் பெரேரா மற்றும் அந்த இணையத்தளத்தின் நிதி முகாமையாளரான பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த மாகேவெலகெதர தனுக என்பவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

துமிந்த சம்பத் என்ற சந்தேக நபரின் வங்கி கணக்கில் 5 கோடி ரூபாய் பணத்திற்கு மேலதிகமாக 12199 அமெரிக்க டொலர் நிலையான வைப்பில் இருந்ததாகவும் அந்த பணமும் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here