இலங்கையில் சினோர்பாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

சினோர்பாம் குறித்து மக்கள் அச்சமடையவேண்டிய அவசியமில்லை என மருத்துவதுறை சார்ந்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சினோர்பார்ம் குறித்து மக்கள் அச்சப்படவேண்டிய சந்தேகமடையவேண்டிய தேவையில்லை என மருத்துவதுறை சார்ந்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெருமளவானவர்கள் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுள்ளனர் இதன்காரணமாக உயிரிழப்புகளும் பாதிப்புகளும் குறைவடைந்துள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தடு;ப்பூசி வழங்கப்பட்டவர்களில் அதிகளவானவர்களிற்கு சினோபார்மே வழங்கப்பட்டது என தெரிவித்துள்ள மருத்துவர் எரங்க நாரங்கொட இதுவே உயிரிழப்புகள் குறைவடைவதற்கும் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்கள் குறைவதற்கும் நிமோனியாவினால் பாதிக்கப்படுவது குறைவதற்கும் காரணமாக அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

சினோர்பார்ம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதி;ற்கு மேற்பட்டவர்களிற்கு குறித்த ஒரு தடுப்பூசியை வழங்கவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்யவில்லை அனைத்து தடுப்பூசிகளும் ஒரேமாதிரியான பலனை அளிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here