இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் திருட்டு…..

0

இலங்கையில் சுமார் 90 ஆயிரம் ரூபா பெறுமதியான சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

ஹபராதுவ சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளது.

சம்பவத்தில் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் இணைக்கப்பட்ட ஒரு சாரதி மற்றும் ஊழியர் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், ஹபராதுவ பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here