இலங்கையில் சாதாரண தரப் பரீட்சையின் போது 3 மாணவர்கள் கைது

0

இலங்கையில் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறுகின்றது.

இந்நிலையில் கெகிராவை பகுதியில் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைகளின்போது, பிறிதொரு மாணவரை தாக்கிய குற்றச்சாட்டுக்காக மூன்று மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான மூன்று மாணவர்களை கெகிராவை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சைக் காலங்களில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்தியைப் போன்று ஆள் மாறாட்டம் செய்த குற்றச்சாட்டுக்காக 27 வயதுடைய இளைஞர் ஒருவரும் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here