இலங்கையில் சாணக்குழியில் விழுந்து பலியாகிய குழந்தை…..!

0

இலங்கையில் மஸ்கெலியா – ப்ரவுன்ஸ்வீக் தோட்டத்தின் டனட்டா பிரிவில் நேற்று மாலை சாணக் குழி ஒன்றில் இரண்டரை வயதான ஆண் குழந்தை விழுந்து பலியாகியுள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில் குறித்த குழந்தை காணாமல் போயிருந்த நிலையில், குழந்தையை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டுத் தொழுவத்தின் சாணக்குழியில் விழுந்திருந்த நிலையில் குழந்தையை மீட்டெடுத்து, வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here