இலங்கையில் சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு?

0

குறுகிய காலத்தில் மீண்டும் உள்ளூர் சந்தையில் எரிவாயு விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கத் தயாரில்லை என லிட்ரோ ஹாஸ் நிறுவனத்தின் தலைவர் துஷார தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தற்போதைய சூழ்நிலையில், விலைகளை உயர்த்தாமல் உலக சந்தையில் நிலையாக இருப்பது கடினம் என குறிப்பிட்டார்.

எனினும், எரிவாயு விலையை நிலையான விலைக்குக் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் எரிவாயு விலைக்கான நிலையான திட்டமிடப்பட்டு, ஒரு நிலையான விலையைப் பராமரிப்பதற்கு முனைவதாகவும் தெரிவித்தார்.

மேலும், எரிவாயு விலைகளைக் குறைப்பதற்கான சரியான நிர்வாகத்தில் கவனம் செலுத்தப்படும் என்றார்.

நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட வேண்டிய ஒன்றல்ல .

அவ்வாறு மறைப்பதால் இலங்கையில் எழும் பொருளாதாரப் பிரச்சினைகளை அரசியலாக்க முயற்சிப்பதில் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எனவே, படித்த மற்றும் புத்திசாலித்தனமான மக்கள் இலங்கை பொருளாதாரத்தைப் பற்றி புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here