இலங்கையில் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா?

0

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும் பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியமும் இல்லை எனவும் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சந்தைவாய்ப்பு தொடர்பில் இடம்பெற்ற மறுஆய்வு கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அரிசி, தேங்காய், பால்மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு மற்றும் தானிய வகை, பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம், கிழங்கு, மரக்கறி மற்றும் பழங்கள் போன்றே எரிவாயு நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.

எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான அழுத்தம் குறித்து கருத்து தெரிவித்த ராஜபக்ஷ கொவிட் -19 தொற்றுநோயுடன் உலக எரிவாயு விலை வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் இலாபம் ஈட்டப்பட்டதாகவும், அக்காலத்தில் தனியார் துறை ஊழியர்களின் வேலைகளை பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தற்போது உதவி வழங்குவது கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here