இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு? 

0

இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை தொடர்ந்து பாதிக்கும் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தை விரைவுபடுத்தவும் மேலும் நான்கு சட்டங்களை விரைவில் திருத்தவும் பாதுகாப்புத் தலைவர்கள் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளனர்.

தேசிய பாதுகாப்புச் சபை நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடிய போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரதானிகளும் இதில் இணைந்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பை பாதிக்கும் சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தையும் விரைவில் கொண்டு வர வேண்டும் என இதன் போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணிச் சட்டம், குடிவரவுச் சட்டம், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான சட்டம், இதுவரையில் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் உடனடித் திருத்தம் கொண்டு வரப்படுவதையும் இதன் போது குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here