இலங்கையில் சத்திர சிகிச்சை முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு

0

இலங்கையில் கொரோனா தொற்றானது அதிதீவிரமாக பரவி வருகின்றது.

நாட்டில் பல பகுதிகள் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைத்தியசாலை துறையில் சத்திர சிகிச்சை முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரண தொகுதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் எச்.எம்.எஸ்.பீ மெதிவத்த இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சத்திர சிகிச்சை முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here