இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்!

0

இலங்கையில் மேலும் 07 கொவிட் இறப்புக்கள் பதிவாகியுள்ளதென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(01) இந்த இறப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பதிவான கொவிட் இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 16,566 ஆக அதிகரித்துள்ளது.

3 ஆண்களும் 4 பெண்களும் கொவிட்-19 தொற்றினால் மரணித்தனர்.

30 முதல் 59 வயதிற்கிடைப்பட்ட 2 பேரும், 60 வயதிற்கு மேற்பட்ட 5 பேரும் கொவிட்-19 தொற்றினால் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here