இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று!

0
Sri Lankans watch as health officers take a swab sample to test for Covid-19 in Colombo, Sri Lanka, Thursday, Oct. 22, 2020. (AP Photo/Eranga Jayawardena)

இலங்கையில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையின் படி இன்றைய தினத்தில் மாத்திரம் 1,243 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 615,902 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 15,544 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 440 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 580,220 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here