இலங்கையில் க.பொ.த பரீட்சையில் மோசடி செய்த மூன்று பேர் கைது..!

0

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தரப்பரீட்சை இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தரப்பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது உறவினருக்காக கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய 21 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் கலுவில பகுதியில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் திஸ்ஸமஹாராம பகுதியை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here