இலங்கையில் கோவிட் தொற்றின் கோரத்தாண்டவம்! – ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மூவர் மரணம்!!

0

நாட்டில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் சராசரியாக கோவிட் காரணமாக மூன்று பேர் மரணிக்கின்றனர் என இலங்கை மருத்துவ சங்கத்தின் உப தலைவர் விசேட நிபணத்துவ மருத்துவர் மனில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார். தடுப்பூசி ஏற்றுகையின் ஊடாக மட்டும் கோவிட் நிலைமைகளை கட்டுப்படுத்திவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாள்தோறும் பதிவாகி வரும் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் டெல்டா திரிபின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் பரவுகை மற்றும் தடுப்பூசி ஏற்றல் ஆகியனவற்றுக்கு இடையிலான போட்டியில் தடுப்பூசி ஏற்றுகையை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாயின் சொற்ப காலத்திற்கேனும் பயணக் கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

டெல்டா திரிபு பரவுகையினால் நாட்டில் கோவிட் நான்காம் அலையின் ஆபத்து காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் டொக்டர் மனில்க இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here