இலங்கையில் கோழி இறைச்சி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

0

விலை அதிகரித்துள்ள நிலையில் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கோழி இறைச்சியின் விலை அதிகரித்த நிலையில், அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது.

இதன்படி தோலுடன் கூடிய இறைச்சி 430 ரூபா எனவும், தோல் நீக்கப்பட்ட இறைச்சி 500 ரூபா என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

எனினும் தற்போது கோழி இறைச்சியின் விலை 800 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் பல இடங்களில் கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாகவும், அதனால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கோழி இறைச்சியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று, கால்நடை, கமத்தொழில் அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை உற்பத்தி தொழிற்துறை அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here