இலங்கையில் கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு வெளியாகிய தகவல்!

0

கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை மாத்திரம் செலுத்திக் கொண்டவர்களுக்கு 93.4 சதவிகித நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் நடுநிலையாக்கும் பிறபொருள் எதிரிகள் (developed neutralizing antibodies) 97.1 சதவிகிதமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு 16 வாரங்களின் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் சதவிகிதத்தில் மாற்றம் இல்லாத போதிலும், நடுநிலையாக்கும் பிறபொருள் எதிரிகளின் சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

26 சதவிகிதத்தினால் இது வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டவுடன் அது மீண்டும் வழமைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here