இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இந்தியாவை விட 10 மடங்கு அதிகரிப்பு!

0

இலங்கையில் கொரோனா தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை இந்தியாவை விட 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஜரட்ட பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுனத் அகம்பொடி இதனை தெரிவித்துள்ளார்.

உலக புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி, இலங்கை யில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தற்போது, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவின் உச்சத்தை விட அதிகமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனை அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட் டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here