இலங்கையில் கொவிட் மரணங்கள் அதிகரிப்பு! பிரேத அறைகளில் நெருக்கடி

0

நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகனம் செய்யும் நடவடிக்கைகள் தகனசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வாறு சரீரங்கள் அதிகளவில் வைத்தியசாலைகளில் தேங்கியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கொவிட் மரணங்கள் தவிர்ந்த, ஏனைய காரணிகளில் மரணமானவர்களின் உடல்களும் தகனம் செய்யப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 600 கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாளொன்றுக்கு 12 முதல் 15 மரணங்கள் வரை பதிவாவதாக அதன் பேச்சாளர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here