இலங்கையில் கொவிட் தடுப்பூசி இரண்டையும் பெற்ற 23 பேர் இதுவரை மரணம்

0

இலங்கையில் கொவிட் மூன்றாம் அலையின் பின்னர் கொவிட் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்ற 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவர்களில் அதிகமானோர் பல்வேறு நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

கொவிட் மூன்றாவது அலையின் பின்னர் ஒரு கொவிட் தடுப்பூசி பெற்றவர்களில் 177 பேரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் மரணங்களின் சதவீதம் மிகவும் குறைவாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் அதிகமானோர் ஒரு தடுப்பூசியேனும் பெறாதவர்கள் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 80 வீதமானோர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இரண்டு தடுப்பூசியும் பெற்றுக் கொள்ளாதவர்களாகும். எனவே உடனடியாக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here