இலங்கையில் கொவிட் சோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதா? சுகாதார அமைச்சு விளக்கம்

0

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண முன்னெடுக்கப்படும் பிசிஆர் மற்றும் பிற சோதனைகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைக்கவில்லை என சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தற்போது நாளாந்தம் ஏராளமான பிசிஆர் மற்றும் விரைவான என்டிஜென் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளரான ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாளாந்த அடிப்படையில் 25,000 முதல் 30,000 ரேபிட் என்டிஜென் கருவிகள் வெளியிடப்படுகின்றன.

இதுபோன்ற கருவிகளை வேறு எந்த சோதனைகளுக்கும் பயன்படுத்த முடியாது, எனவே கொவிட் -19 தொற்றாளர்களை கண்டறிய நாட்டில் தினமும் ஏராளமான சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here