இலங்கையில் கொரோனா பரிசோதனை முறையில் மாற்றம்!

0

இலங்கையில் ஒரு நாள் வைத்தியசாலையில் தங்கியிருந்தால் மட்டுமே அன்டிஜென் பரிசோதனை செய்யுமாறு சில தனியார் வைத்தியசாலைகள் அறிவித்துள்ளன.

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளும் அன்டிஜென் பரிசோதனை செய்ய பணம் செலுத்தி ஒரு நாள் தங்குமாறு சில தனியார் வைத்தியசாலைகள் அறிவித்துள்ளன.

குறித்த பரிசோதனை செய்வதற்காக சுகாதார அமைச்சால் நிர்ணயிக்கப்பட்ட விலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2000 ஆயிரம் ரூபா விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளதால் அன்டிஜென் பரிசோதனை செய்வதை சில தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளன.

பணம் செலுத்தி ஒரு நாள் வைத்தியசாலையில் தங்கியிருந்தால் மட்டுமே அன்டிஜென் பரிசோதனை செய்வதாக சில தனியார் வைத்தியசாலைகள் அறிவித்துள்ளன.

குறித்த நிலைமை காரணமாக கொரோனா தொற்றாளர்கள் என சந்தேகப் படும் நபர்களைப் பரிசோதனை செய்வதில் கடுமையான பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here