
நாட்டில் தற்போது கண்டறியப்பட்ட கொவிட்-19 நோயாளிகளில் 99% பேர் ஒமிக்ரோன் பிறழ்வால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெல்டா பிறழ்வானது படிப்படியாக மறைந்து வருவதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒமிக்ரோன் பிறழ்வானது ஆதிக்கம் செலுத்துவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகம் முன்னர் அறிவித்தது.
கொவிட்-19 நோயாளர்களுக்குத் தேவையான படுக்கை வசதிகள் மருத்துவமனைகளில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கொவிட் -19 நோயாளர்களுக்கு அதிதீவிர சிகிச்சை படுக்கைகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகக் கூறும் கருத்தையும் சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.