இலங்கையில் கொரோனா தொற்றில் மேலும் 32 பேர் மரணம் – விபரம் வெளியானது

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இவற்றுள் நேற்றைய தினம் 05 கொவிட் மரணங்கள் மாத்திரமே இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.

மேலும், ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி முதல் மே மாதம் 22 வரை இடம்பெற்ற கொவிட் 19 நோயாளர்களின் மரணங்கள் 27 என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 ஒருவரும், மே 17 ஆம் திகதி ஒருவரும், மே 18 ஆம் திகதி ஒருவரும், மே 19 ஆம் திகதி 04 மரணங்களும், மே 20 ஆம் திகதி 10 மரணங்களும், மே 21 ஆம் திகதி 05 மரணங்களும், மே 22 ஆம் திகதி 05 மரணங்களும், மே 23 ஆம் திகதி 05 மரணங்களும், பதிவாகியுள்ளன.

அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1210 ஆகும்.

 1. மாத்தளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 91 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே மாதம் 20 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று மற்றும் புற்றுநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 2. மாத்தளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 44 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 20 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 3. நீர்கொழும்பு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 28 வயதுடைய ஆண் ஒருவர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 ஏப்ரல் 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 4. கொட்டுகொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 78 வயதுடைய பெண் ஒருவர், நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 20 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நி10மோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 5. நாரங்கொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 42 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 19 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று மற்றும் தீவிர புற்றுநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 6. ஹசலக்க பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய பெண் ஒருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 20 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாககக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 7. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 20 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 8. பதுளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 52 வயதுடைய ஆண் ஒருவர், பதுளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 20 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவுடன் குருதி நஞ்சானமை, நீரிழிவ, உயர் குருதியழுத்தம் மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 9. பானந்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 21 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 10. கல்எலிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 86 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 21 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, உயர் குருதியழுத்தம் மற்றும் மூச்சிழுப்பு நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 11. அலவ்வ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 43 வயதுடைய ஆண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 20 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவுடன் பல உறுப்புக்கள் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 12. பொலன்னறுவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய பெண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 21 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 13. களுத்துறை தெற்கு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 19 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 14. போகஹகும்புர பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 46 வயதுடைய பெண் ஒருவர், பதுளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 21 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவுடன் குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் புற்றுநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 15. இமதூவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 20 வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 16. மாவனெல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய பெண் ஒருவர், மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவால் மோசமடைந்த இதயநோய் மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 17. காத்தான்குடி – 06 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய பெண் ஒருவர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் நீரிழிவு நிலைமையால் மோசமடைந்த இதய நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 18. கட்டுகித்துல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய ஆண் ஒருவர், கொத்மலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 19. எந்தேரமுல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 85 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 20. ஹாவாஎலிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய பெண் ஒருவர், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 21. ஹற்றன் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய ஆண் ஒருவர், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 21 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 22. மாவனெல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய பெண் ஒருவர், மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் மோசமான சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 23. பன்னிப்பிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், நெவில் பெர்னான்டொ போதனா வைத ;தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 19 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா இதயநோயால் இதயம் சுவாசம் தடைப்பட்டமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 24. மஹரகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய ஆண் ஒருவர், சிறுநீரகவியல் கூழ்மப்பிரிப்பு மற்றும் சிறுநீரக அறுவைச் சிகிச்சை தேசிய நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 25. கந்தானை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 18 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம், தைரொயிட் மற்றும் சுவாசம் இதயம் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 26. மினுவங்கொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடைய பெண் ஒருவர், நெவில் பெர்னான்டோ போதனா வைத ;தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 20 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, மார்புத் தொற்று மற்றும் தீவிர இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப ;பட்டுள்ளன.
 27. பானந்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 89 வயதுடைய பெண் ஒருவர், நெவில் பெர்னான்டோ போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, உயர் குருதியழுத்தம், நீரிழிவு, இதயநோய் மற்றும் சுவாசக் கோளாறு போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 28. கலவான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 77 வயதுடைய பெண் ஒருவர், நெவில் பெர்னான்டோ போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 19 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நிமோனியா, நுரையீரல் நோய் மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 29. மஹரகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 30. ருவன்வெல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய ஆண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 31. மத்துகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் 2021 மே 22 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 32. நுகேகொடை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 48 வயதுடைய ஆண் ஒருவர், பதுளை மாவட்ட பொது வைத்தியசாலையில் 2021 மே 23 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் மூச்சிழுப்பு நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here