இலங்கையில் கொரோனா தொற்றில் 18 வயது யுவதி மரணம்

0

இலங்கையில் கொரோனாத் தொற்று இளவயதினர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், 18 வயது யுவதி, 35 வயது ஆண் உட்பட நான்கு கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக இன்று இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களில் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான யுவதி முன்னர் வேறெந்த நோயாலும் பாதிக்கப்பட்டிராதவராவார்.

கொழும்பு – தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 21-ஆம் திகதி அவா் உயிரிழந்தார். கொரோனா தொற்று நோயுடன் நிமோனியாவால் பாதிப்பட்டு அவர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய ஆண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையிலி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு 21 -ஆம் திகதி உயிரிழந்தார்.

பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும், மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்று மட்டும் இலங்கையில் 969 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்களுடன் இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 99,691 -ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களில் 94,036 பேர் குணமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here