இலங்கையில் கொரோனா தொற்றின் 3வது அலையா? மக்களுக்கு எச்சரிக்கை!

0

இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடர்பான எவ்வித அச்சுறுத்தலும் காணப்படவில்லை என்றாலும் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் இத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கை தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சியடைவதாக கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அல்லது சுகாதார வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டால் அடுத்த மாத புத்தாண்டு மற்றும் ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையும் மூன்றாவது அலையை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டின் போது எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாததால் ஜனவரி பிற்பகுதியிலும் பெப்ரவரி மாத தொடக்கத்திலும் தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டது என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே அனைத்து இலங்கையர்களும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here