இலங்கையில் கொரோனா தொற்றாளர்களினால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்!

0

கம்பஹா வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்றாளர்களினால் தற்போது நிரம்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக சிகிச்சையளிக்க அமைக்கப்பட்ட கம்பஹா பொது வைத்தியசாலையிலுள்ள அறையின் படுக்கைகள் மற்றும் வெரெல்லவத்தவிலுள்ள பெண்கள் கொரோனா சிகிச்சை மையத்திலுள்ள படுக்கைகள் நிரம்பியுள்ளன.

ஆகவே கொரேனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நோயாளர்களை ஏனைய சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கம்பாஹா வைத்தியசாலையில் 120 படுக்கைகள் மாத்திரமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று நாட்டின் பல பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களால் நிரம்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here