இலங்கையில் கொரோனா தொடர்பான உண்மையான தகவல்கள் மறைக்கப்படுகின்றதா?

0

இராணுவத்தின் முக்கிய அதிகாரியும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் இரண்டு மருத்துவர்ககளும் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழ்ந்தவர்கள் குறித்த புள்ளிவிபரங்களில் மாற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் விமல்வீரவன்சவின் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றது, திட்டமிட்ட முறையில் தரவுகளை மாற்றுகின்றனர். எனக்கு இது குறித்த விசேட தரவுகள் கிடைத்த என விமல்வீரவன்சவின் கட்சியின் பேச்சாளர் முகமட் முஜாமில் தெரிவித்துள்ளார்.

11 ம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் அன்டிஜென் சோதனைகள் குறித்த தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. இந்த பிசிஆர் சோதனைகளின் போது 4175 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

அன்டிஜென் சோதiனையின் போது 1239 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டனர், ஒட்டுமொத்தமாக அன்று 5414 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விபரங்கள் வெளியாகவில்லை இதன் மூலம் குழுவொன்று உண்மையான நிலவரத்தை மாற்றிஅறிவிப்பதில் ஈடுபட்டுள்ளது என்பது புலனாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயியல் பிரிவை சேர்ந்த இரண்டு முக்கிய மருத்துவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களுடன் இணைந்து இராணுவத்தின் முக்கிய அதிகாரியும் புள்ளிவிபரங்களை மாற்றுகின்றார், ஜனாதிபதியிடம் பிழையான தரவுகள் வழங்கப்பட்டால் அதனை அடிப்படையாக கொண்டு பிழையான முடிவுகளே எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here