கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசியால் இந்த மரணம் நிகழ்ந்ததென கருத்திற்கொள்ள முடியாதென பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னர் தொடர்ந்து இரண்டு நாட்கள் காய்ச்சல் இருந்தால் வைத்தியரை சந்திக்க வேண்டும்.
தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் ஓய்வாக இருப்பது மிகவும் அவசியம் என பிரதி சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.