இலங்கையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் மரணம்

0

பண்டாரவெல, கஹத்தேவெல, சமகி மாவத்தை பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்த ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் 62 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் கிராம உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் பதுளை பொது வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் மூன்று நாட்களுக்கு பின்னர் நேற்று (17) காலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பண்டாரவெல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதிய தொற்றாளர்கள் 59 பேர் நேற்று இனங்காணப்பட்டனர்.

அதில் 37 பேர் உடனடி என்டிஜன் பரிசோதனையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதித்து ஏனையவர்களை வீட்டினுள் தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க பண்டாரவெல பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here