இலங்கையில் கொரோனாவுக்கு மத்தியில் மற்றுமொரு ஆபத்து!

0

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரையில் 6,383 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகளவானோர் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

அந்த மாவட்டத்தில் இதுவரை 2,686 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தப்படியாக கொழும்பு மாவட்டத்தில் 939 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குருணாகல் மாவட்டத்தில் 213 பேரும், கண்டி மாவட்டத்தில் 213 பேரும், டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே குறைந்தளவான டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அந்த மாவட்டத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் எந்தவொரு டெங்கு நோயாளர்களும் பதிவாகவில்லை.

அதேநேரம் நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோய் பரவக்கூடிய அவதான நிலைமை காணப்படுவதால் அது பொது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார பிரிவினர், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here