இலங்கையில் கொரோனாவின் உண்மை நிலவரத்தை அறியமுடியாத நிலைமை!

0

புதிய சுற்றுநிரூபம் காரணமாக நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பிசிஆர் அன்டிஜென் பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர் இதன் காரணமாக உண்மை நிலவரத்தை அறிய முடியாமலுள்ள என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் புதிய சுற்றுநிரூபம் காரணமாக நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பிசிஆர் துரித அன்டிஜென் பரிசோதனை ஆகியவற்றின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து துல்லியமான தகவல்களை சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் மூலம் அறிய முடியாமலுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தொடர்பில் நோய் அறிகுறிகள் உள்ளவர்களை அன்டிஜென் சோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த சுற்றுநிரூபத்தை வெளியிடடுள்ளார், என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here