இலங்கையில் கொரோனாவால் மரணிப்போர் தொடர்பில் வெளியான தகவல்

0

கொரோனா தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை நூற்றுக்கு 60 சதவீதமாகஅதிகரித்துள்ளமை ஆபத்தான நிலைமையை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது என அரசாங்க மருத் துவ அதிகாரிகள் மன்றத்தின் செய லாளர் மருத்துவர் கமல் ஏ.பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட சகல பிரதான வைத் தியசாலைகளும் கொள்ளளவு திறனை மீறியுள்ளன. கொரோனா தொற்று நோயாளர்களை அனுமதிப்பதால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றம் (GMOF) அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் செயலாளர் மருத்துவர் கமல் ஏ.பெரேரா ஊடக அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் மிக வேகமாக டெல்டா கொரோனா பரவி வருவதால் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்த நாட்டை சில வாரங்களுக்கு மூட வேண்டும் என்று சங்கம் முன்பு அரசாங்கத்துக்கு அறிவித்தது என்றும் தீர்மானம் எடுக்கத் தாமதமாகும் ஒவ்வொரு நாளும், டெல்டா கொரோனா மிக விரைவாக நாடு முழுவதும் பரவி, நாட்டின் வைத்திய சாலைகளின் கொள்ளளவு திறனை மீறிவிட்டதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றம் சுட்டிக்காட்டுகிறது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 34 சத வீதம் அதிகரித்துள்ளது என்றும் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள நோயாளர்களின் எண் ணிக்கை நாள் ஒன்றில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, கொரோனா தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை நூற்றுக்கு 60 சதவீதமாக அதிகரித்துள்ளமை ஆபத்தான நிலைமையை மிகவும் தெளி வாகக் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள் ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here